2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘சீனாவிடம் கடன் வாங்கினால் இலங்கையின் நிலைதான்’

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவிடமிருந்து கடன்களை வாங்கினால், இலங்கையைப் போன்று கடனுக்குள் சிக்க வேண்டிய நிலை ஏற்படுமென, பிலிப்பைன்ஸ் உப ஜனாதிபதிகளுள் ஒருவரான லெனி றொப்ரெடோ எச்சரித்தார் என, பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் அறிக்கையிடுகின்றன.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி றொட்ரிகோ டுட்டேர்ட்டேயின் அரசாங்கம், சீனாவிடமிருந்து கடனைப் பெற்று, அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுகிறது. இது தொடர்பாக உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.   

அண்மையில், 171 பில்லியன் பிலிப்பைன்ஸ் பெசோ (சுமார் 291 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள்) மதிப்பிலான ரயில் கட்டமைப்பொன்றின் வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.   அதைச் சுட்டிக்காட்டி உரையாற்றிய அவர்,

“முதலில், இது கடனாகும். மிகப்பெரிய 171 பில்லியன் பிலிப்பைன்ஸ் பெசோ அளவிலான கடன். அது, மிகப்பெரியது. இலங்கையால் அனுபவிக்கப்படுவது போல, மிகப்பெரிய கடன் பிடிக்குள் நாம் சிக்கிவிடுவோமோ என்பது தான், எமது அச்சமாக உள்ளது” என்று தெரிவித்தார்.  

சீனாவிடம் கடன் வாங்குவதற்கு தான் முழுமையாக எதிர்ப்பாக இல்லாவிட்டாலும், அபிவிருத்தித் திட்டங்களுக்காக, தொடர்ந்தும் கடனைப் பெறுவதை விட, வேறு வழிகள் குறித்துச் சிந்திக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .