2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சுகாதார அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்

Editorial   / 2018 ஜூலை 18 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக பீ.ஜி.எஸ். குணதிலக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால்  இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரான ஜனக சுகந்ததாச நேற்றுடன் ஓய்வுப் பெற்றுச் சென்றுள்ளதால், குணதிலக சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழிலாளர் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், இறப்பர் அபிவிருத்தி திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் கடமையாற்றியுள்ள இவர், வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகவும், 2016ஆம் ஆண்டிலிருந்து சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளராகவும் கடமையாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .