2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சுகாதாரத்துக்கென ​தொலைக்காட்சி சேவை ஆரம்பம்

Editorial   / 2018 ஜனவரி 19 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டு மக்களிடையே சுகாதாரத்தைப் பேணும் நோக்கில், தேசிய சுகாதாரத் தொலைக்காட்சிச் சேவையொன்று, ​நாளை (20) முதல் கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாட்டு மக்களின் சுகாதார நிலைமையைப் பேணல் மற்றும் சுகாதாரமானதொரு சமூகத்தைக் கட்டியெழுப்பல் என்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே, இந்தத் தொலைக்காட்சிச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

தொற்றா நோய்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல், குடும்பநலச் சுகாதாரம் தொடர்பில் அறிவூட்டல், போஷாக்கு, விளையாட்டு மற்றும் வீட்டு வாழ்க்கை தொடர்பில் தெளிவூட்டல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், இந்தத் தொலைக்காட்சிச் சேவையூடாக ஒளி, ஒலிபரப்பப்படுமென, சுகாதார அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் பிரசன்ன அதிகாரி தெரிவித்தார்.

கொழும்பு கலதாரி ஹோட்டலில், இந்தத் தொலைக்காட்சிச் சேவை ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், அதன் பிரதம விருந்தினராக, சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன கலந்துகொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .