2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சூரிய சக்தி ஊடான மின் உற்பத்தி திட்டத்தை அமுல்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை

ஆர்.மகேஸ்வரி   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் அவசர மின் தேவையைக் கருத்திற்கொண்டு, சூரிய சக்தியின் ஊடான மின் உற்பத்தி திட்டத்தை அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக, சூரிய சக்தி தொழிற்றுறையினரின் சங்கத்தின் தலைவர் குசன் ஜயசூரிய தெரிவித்தார்.

இன்று (18) கொழும்பு -2 நிப்பொன் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

தற்போது இலங்கையில் நாளாந்தம் முன்னெடுக்கப்படும் 4 மணிநேர மின் துண்டிப்பின் விளைவாக இலங்கை நாளொன்றுக்கு 1 பில்லியன் ரூபாய் பொருளாதார இழப்புக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மின் விநியோகத்தின் அளவு இடைவெளி அதிகரிப்பதால், குறைந்த பட்சம் 2022ஆம் ஆண்டு வரை இந்நிலை மிகவும் மோசமடையும் என்றும் எதிர்வு கூறப்புடுவதாகவும் வருடாந்த மின்சாரத்துக்கான கேள்வியானது 5 சதவீதத்தால் அதிகரிப்பதுடன், 2025ஆம் ஆண்டு தேசிய மின்சார கட்டமைப்புக்கு மேலதிகமாக 5,500 GWh மின்சார உற்பத்தி இலங்கைக்கு தேவைப்படும் என்றும்  அவர் தெரிவித்தார்.

(படம்- சத்துர கொடிகார)

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .