2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சோபா ஒப்பந்த பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை, சர்ச்சைக்குரிய சோபா ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க தூதுவர் அலெய்னா பி ரெப்லிட்ஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போது, இதனைக் கூறியுள்ளார்.

அமெரிக்க தூதுவர் சில வாரங்களுக்கு முன்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துபேச விருப்பம் வெளியிட்டிருந்தார், எனினும், அத்தகைய சந்திப்புக்கு சாத்தியமில்லை என்று ஜனாதிபதி வருத்தம் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, மிலேனியம் சவால் நிதியத்தின் 480 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகையைப் பெறுவதற்கான காலஅவகாசம் தற்போது முடிந்து விட்டதாகவும் அலெய்னா பி ரெப்லிட்ஸ், ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .