2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி எப்போது பதவி விலகுவார்?

Editorial   / 2018 ஜனவரி 19 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நான், ஜனாதிபதிப் பதவியிலிருந்து எப்போது விலகப் போகிறேன் என்று பலர் பலவாறான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்ற போதிலும், ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுத்த பின்னரே, நான் இந்தப் பதவியிலிருந்து செல்வேன்” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊழல், மோசடிக்கு எதிராக, மக்களோடு இணைந்து வீதிக்கு இறங்கவும் தான் தயாரென, கொஸ்கம பிரதேசத்தில் ​நேற்று (18) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, ஜனாதிபதி கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்குப் பின்னர், அரசியல் பாகுபாடின்றி, நாட்டின் மீது பற்றுள்ள அனைத்து அரசியல்வாதிகளையும் இணைத்துக்கொண்டு, ஊழலுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாகவும் அதில், மதத் தலைவர்கள், கல்வியியலாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட நாட்டின் மீது பற்றுள்ள அனைத்துத் தரப்பினரும் இணைந்துகொள்ள வேண்டுமெனவும் ஜனாதிபதி கூறினார்.

2015 ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற வரலாற்றுத் தவறைத் திருத்திக்கொள்ள அணி திரளுமாறு, முன்னாள் தலைவர்கள் கூறிவருவதை ஞாபகப்படுத்திய ஜனாதிபதி, ஊழல் மோசடிமிக்க ஆட்சிக்கும் காணாமலாக்குதல், படுகொலைகள், ஊடக அடக்குமுறைகள் போன்ற நடவடிக்கைகளுக்கான  மற்றுமொரு ஆணையை​யே அவர்கள், மக்களிடம் கேட்டு நிற்கின்றனரென்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .