2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜனாதிபதி சட்டத்தரணிகளாக 21 பேர் நியமனம்

Editorial   / 2019 ஏப்ரல் 17 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி சட்டத்தரணிகளாக 21 சட்டத்தரணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் 33 (2) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதியிடம் பகிரப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய, இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, சம்பத் மென்டிஸ், நவின் மாரப்பன, ஸானக த சில்வா, பியசேன தீரத்ன, எம்.ஜயசிங்க, நளிந்த ஜயதிஸ்ஸ, வீ.​கே. சொக்ஸி, நளீன் திசாநாயக்க, மயூர குணவன்ஸ, வசந்த கஜநாயக்க, அஜந்த ரொட்ரிகோ, பாமர் காசிம், ஜகத் விக்ரமநாயக்க, சுமித் ​பொன்சேகா, வீசலி அமித்ரிகல, சாலிய மொஹொட்டி, வின்சன்ட் பெரேரா, சனத் வீரரத்ன, ஏ.எச்.எம்.இல்லியாஸ், சுவர்ணா பெரேரா ஆகிய சட்டத்தரணிகளே ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமனம் பெற்றுள்ளனர்.

இந்தியாவுக்கான பிரத்தியேக விஜயம் மேற்கொண்டு சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும், குறித்த சட்டத்தரணிகள் 21 பேரும் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .