2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’ஜனாதிபதி நாடு திரும்பியதும் புதிய நிகழ்ச்சித் திட்டங்கள்’

Editorial   / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைப் பலப்படுத்தி புதிய வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டை முன்னோக்கிக் கொண்டுச்செல்ல எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் "இந்த நாட்டின் சமாதானம், நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பலப்படுத்த வேண்டும். அதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். எமது அரசாங்கத்தால் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு வேலைத்திட்டங்களின் பிரதிபலன்களை அனுபவிப்பதற்கான காலம் கனிந்துள்ளது. அதேபோல் கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை நிறைவு செய்வதற்கும், புதிதாக வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கும் ஏற்கனவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிரித்தானிய விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் புதிய நிகழ்ச்சித் திட்டங்கள் பலவற்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு உள்ளிட்ட சில இயற்கை அழிகவுகளை கடந்த வருடம் இந்த நாடு எதிர்கொண்டது." எனக் குறிப்பிட்டுள்ளார்.                       


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X