2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’ஜனாதிபதியின் ஆற்றவிருப்பது கொள்கை விளக்கவுரை அல்ல’

Editorial   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது  நிறுத்திவைக்கப்பட்டுள்ள  நாடாளுமன்ற அமர்வுகள், அடுத்த மாதம் மீள ஆரம்பிக்கப்படும் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றவுள்ள உரை மீது, வாக்கெடுப்பு எதுவும் இடம்பெறாது என அறிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் உரை, முன்னர் கூறப்பட்டதைப் போன்று, அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையாக அமையாது என்பதாலேயே, இந்நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உரை மீது வாக்களிப்பு இடம்பெறுமா, அதனால் அமைச்சரவை கலைக்கப்படுமா போன்ற சந்தேகங்கள், தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வந்தன. ஊடகங்களிலும், தொடர்ச்சியாக மாறுபட்ட கருத்துகள் பதியப்பட்டு வந்தன.

சில கருத்துகளின் அடிப்படையில், ஜனாதிபதியால் ஆற்றப்படும் கொள்கை விளக்க உரை மீது, வாக்களிப்பு நடத்துவதற்கான வாய்ப்பு, அரசமைப்பில் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டது.

எனினும், அடுத்த மாதம் ஜனாதிபதி ஆற்றவுள்ள உரை, அரசாங்கக் கொள்கைக் கூற்று என்ற வகைக்குள் அடங்காது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதை உறுதிப்படுத்திய ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், அரசாங்கக் கொள்கைக் கூற்றாக அமைய வேண்டுமாயின், அமைச்சரவைக்கு அவ்வுரை சமர்ப்பிக்கப்பட்டு, அமைச்சரவையின் அங்கிகாரம் பெறப்பட வேண்டுமென விளக்கமளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .