2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஜெப்ரி ஜோசப் அலோசியஸின் வெளிநாட்டு அனுமதியை நீக்கக்கோரிக்கை

Editorial   / 2019 ஜூன் 19 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தின் சந்தேகநபரான, பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவரான, ஜெப்ரி ஜோசப் அலோசியஸுக்கு வழங்கப்பட்டுள்ள, வெளிநாடு செல்வதற்கான அனுமதியை நீக்குமாறுக் கோரி, சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில், நாளை அறிவிக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான்  இரு தரப்பு சட்டத்தரணிகளிடமும் உத்தரவிட்டுள்ளார்.

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்டமா அதிபர் குறித்த மனு ஊடாக, மத்திய வங்கி சம்பவத்தின் சந்தேகநபராகப் பெயர்க் குறிப்பிடப்பட்டுள்ள ஜெப்ரி ஜோசப் அலோசியஸுக்கு, அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து 11ஆம் திகதி வரைக்குள் அவரது மகளின் திருமண நிகழ்வுகளுக்காக, வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே மத்திய வங்கி பிணைமுறி தொடர்பில், நிரந்த ​மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதென்றும் எனவே, அந்த வழக்கின் சந்தேகநபரான ஜெப்ரி ஜோசப் அலோசியஸ் வெளிநாடு செல்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை இரத்துச் செய்யுமாறு சட்டமா அதிபரின் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் இது தொடர்பான காரணங்களை நாளை முன்வைக்குமாறும் நீதவான் சட்டமா அதிபர், பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .