2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

​​‘ஜே.வி.பியிடம் மஹிந்த உறுதி’

Editorial   / 2018 ஏப்ரல் 18 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

“நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான சட்டமூலம் கொண்டுவரப்படுமாயின், அதற்கு தான் முழுமையான ஒத்துழைப்பை நல்குவேன் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜே.வி.பியிடம் தெரிவித்தள்ளார்” எனத் தெரிவித்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான கலாநிதி பந்துல குணவர்தன, “அதற்கு ஆதரவாக வாக்களிப்பேன் என்றும் உறுதியளித்துள்ளார்” என்றார்.

புஞ்சி பொரளையில் உள்ள வஜிராராம விகாரையில், நேற்று (17) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த ​போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,

“நல்லாட்சி அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, நாடாளுமன்றத்தைக் கலைத்து, பொதுத் தேர்த​லின் பின்னரான புதிய நாடாளுமன்றில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான திருத்தச் சட்டமூலத்தை, கொண்டுவந்தால் அதற்கு ஆதரவளித்து, ஆதரவாக வாக்களிப்பேன் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் மஹிந்த உறுதியளித்துள்ளார்” என்றார்.

“நல்லாட்சி அரசாங்கம், ஆட்சிபீடம் ஏறியதன் பின்னர் நாட்டு வளங்கள் வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்க்கப்பட்டு வருகின்றன. எனது தேர்தல் தொகுதியில் மட்டும் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பு கொரிய நாட்டு நிறுவனத்துக்கு குத்தகைகக்கு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X