2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜேர்மனுக்கு தாவிய பெண் கட்டாரில் சிக்கினார்

Editorial   / 2017 ஒக்டோபர் 17 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் ஜேர்மன் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த இலங்கைப் பெண்ணொருவர், கட்டார் விமானநிலையத்தில் வைத்து, இன்று (17) கைது செய்யப்பட்டார்.  

போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தியே, இவர் ஜேர்மனிக்கு செல்வதற்கு முயற்சி செய்துள்ளதாகவும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திலிருந்து, கட்டார் விமானநிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து மாற்று விமானம் மூலம், ஜேர்மனுக்குச் செல்லவிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர், மாற்று விமானத்தில் செல்வதற்கு ஆயத்தமானபோது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, கைது செய்யப்பட்டுள்ளார்.   

இதேவேளை, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்டவிசாரணையின் போது, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி உரையாடியதாகவும் எனினும், அதற்குப் பின்னர் நடைபெற்ற விசாரணையின் போது, தனக்கு வாய்பேச முடியாது என்று, குறித்த பெண் சைகைக் காட்டியதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.   

இதையடுத்து, சிக்கிய பெண்ணுக்கு பேச்சு வருமா வராதா என்பது தொடர்பில் தெரிந்துகொள்ளும் பொருட்டு, அவர், வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு வாய்பேச முடியும் என்று, வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   
இந்நிலையில், குறித்த பெண், மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.   

யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X