2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

டிசெம்பர் 31ஆம் திகதி நிலநடுக்கம் ஏற்படும்?

Editorial   / 2017 செப்டெம்பர் 25 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய நாடுகளின் கடல் எல்லைகளையே மாற்றும் அளவுக்கு மிகப்பெரிய நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடலில் ஏற்படப் போவதாக, கேரளாவைச் சேர்ந்த பாபு கலயில் என்பவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.   

இந்த கடிதம் தொடர்பில் இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள, அந்தக் கடிதத்தில், ‘இந்தியப் பெருங்கடலில் எதிர்வரும் டிசெம்பர் 31ஆம் திகதிக்குள் பெரும் நிலநடுக்கம் ஒன்று ஏற்படப் போகிறது. வலிமையான அந்த நிலநடுக்கத்தால் ஆசியக் கண்டத்தின் கடற்கரைகள் அனைத்தும் பெரிய அளவில் பாதிக்கப்படும்.   

இதனால் கடல் எல்லைகளே மாறும். இந்த நிலநடுக்கத்தால் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், தாய்லாந்து, இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் வளைகுடா நாடுகள் வரை பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும்.   
இதனால் கடலில் மணிக்கு 120 கிலோமீற்றர் முதல் 180 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், கனமழையும் பெய்யக்கூடும். மேலும், சுனாமி அலைகளும் ஏற்படக் கூடும்’ என்று அந்த எச்சரிக்கைக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இ.எஸ்.பி சக்தி மூலம் கடந்த ஓகஸ்ட் 20 ஆம் திகதி, இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .