2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தேங்காய்க்கு நிர்ணய விலை

Editorial   / 2020 செப்டெம்பர் 26 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேங்காய்களின் தன்மையை​ பொருத்து அதற்கான அதிகபட்ச சில்லறை விலையாக 60 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தேங்காயின் சுற்றுவட்டம்  12 அங்குலத்துக்கு குறைவாக இருக்கும் 60 ரூபாயும் 13 அங்குலமாக இருக்குமாயின் அதற்கான அதிக பட்ச சில்லறை விலை 65 ரூபாயெனவும் நிர்​ணயிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு,  13 அங்குலத்துக்கு அதிகமான தேங்காய்க்கான விலை 70 ரூபாயெனவும்,  இந்த நிர்ணய விலை இன்று முதல் அமுலாகுமெனவும்  நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. 

அத்தோடு, மேற்படி நிர்ணய விலைக்கு அதிகமான எந்தவொரு விற்பனை முகவர்களும் தேங்காயை விற்பனை செய்ய முடியாதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அண்மையில் தேங்காய் உற்பத்தி குறைந்தமையே விலையேற்றத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .