2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தேசிய தேங்காய் எண்ணெய் உற்பத்திப்பு பாதிப்பு

Gavitha   / 2021 ஜனவரி 25 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரம்பரிய உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களின் 40 வருட காலமாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள  தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களின் சங்கத்தின் ஏற்பட்டாளர் புத்தித த சில்வா, எந்தவொரு நிபந்தனையும் இன்றி, தேசிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேசிய உற்பத்தி சார் தொழில்களில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டதால், உள்ளூர் உற்பத்திகள் தடைப்பட்டன என்றார்.

எமது நாட்டில் தேங்காய் உற்பத்தியை உரிய முறையில் முறையான நிபந்தனையுடன் கட்டுப்படுத்தி, சகல உற்பத்தி நிறுவனங்களுக்கும் சமமாக பகிர்வது தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் பங்காகும். எனினும் கடந்த 40 வருடங்களாக குறித்த அதிகாரசபையின் அதிகாரிகள்,முறைகேடான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். முழு நாட்டுக்கும் பகிரவேண்டிய தேங்காய்களை சில நிறுவனங்களுக்கு மாத்திரம் விநியோகித்து, நாட்டில் தேங்காய் பற்றாக்குறை இருப்பதாக எண்ணத்தை தோற்றுவித்தனர். அதுமாத்திரமின்றி நாட்டில் தேங்காய் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதென தவறான பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர். 

அப்படி எதுவும் நடக்காது. இது பன்னாட்டு நிறுவனங்களின் வருமானத்தைப் பெறுவதற்கான அப்பட்டமான போலி பிரசாரமாகும் என்றார்.

தேங்காய் எண்ணெய் பற்றாக்குறையை உருவாக்கி, அதிக விலைக்கு தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்யும் தேவையே அவர்களுக்கு உள்ளது.இதற்கமைய, தான் தேங்காய் எண்ணெய் பற்றாக்குறையை ஏற்படுத்தி தரமற்ற எண்ணெய் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்ட போதே, உள்ளூர் தேங்காய் எண்ணெய் தொழிற்றுரை முடங்கியது என்றார்.

எனினும் எமது பிரச்சினைத் தொடர்பில், தொழிற்றுறை அமைச்சர் விமல் வீரவன்சவும் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், உடனடியாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய், பாம் ஒயில் என்பவற்றின் இறக்குமதியை மட்டுப்படுத்துவது குறித்து அமைச்சரவையிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

நாட்டுக்குத் தேவையான 180,000-190,000 மெட்றிக் தொன் தேங்காய் எண்ணெயை எம்மால் உற்பத்தி செய்ய முடியும் என தெரிவித்துள்ள உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் ஏற்பாட்டாளர்,மோசடியான முறையில் எண்ணெய் இறக்குமதி செய்பவர்களுக்கு தண்டனை வழங்குமாறும் இவர்களால் அரசாங்கத்துக்கு ஏற்படும் நட்டத்தை அவர்களிடமே அறவிடும் வேலைத்திட்டத்தை ஏற்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X