2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘தடை நீடித்தால் நோய் கூடும்’

Editorial   / 2017 ஜூலை 06 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

“குப்பைகளைச் சேகரிப்பது பிரச்சினையில்லை, அவற்றைக் கொட்டுவதே பிரச்சினையாக உள்ளது” என்று, குறிப்பிட்ட பிரதமர், குப்பை விவகாரம் தொடர்பில் தடை நீடிக்கப்படுமாயின் நோய்கள் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் நேற்று (05), குப்பை விவகாரம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

“சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து, நீதிமன்றம் முடிவொன்றை எட்டவேண்டும். முத்துராஜவெலயில் குப்பைகொட்டுவது தொடர்பில் உயர்நீதிமன்றத்தால் இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

அதனால், மனுவுக்குச் சார்பான தீர்ப்பை வழங்கவேண்டுமென்று நான் ​கூறவில்லை. எனினும், நீதிமன்றத்துக்கு ஒரு பொறுப்பு உண்டு. குப்பைகளினால் டெங்கு அதிகரித்துள்ளது.  மனிதர்கள் மரணிக்கின்றனர். இவ்வாறான நிலையில் தடைகளை நீடித்தால் நோய்கள் அதிகரிக்கும்  மரணங்களும் கூடும்” என்றார்.  “கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள குப்பைப் பிரச்சினைக்கு வெள்ளிக்கிழமைக்குள்  தீர்வு காணப்படும். ஏனைய பிரதேசங்களில் உள்ள குப்பைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, அந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .