2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’தன்னைத் தவிர வேறு யாரும் இல்லை’

Editorial   / 2019 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தானே என்றும் தனக்கு பதிலாக, தனது கட்சியிலிருந்து எவரும் களமிறங்கமாட்டார்கள் என்றும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

தனக்கு பதில் வேறொரு நபர் களமிறங்குவார் என்ற வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று இதன்போது அவர் கோரினார்.

வடக்கு, கிழக்கு, மலையகம் என, நாடெங்கிலும் பரந்து வாழும் தமிழ்பேசும் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தனது ஆட்சியில் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்த அவர், தன்னைத் தமிழ்பேசும் மக்களின் எதிரியாகக் சித்தரித்துக்காட்ட அரசியல்வாதிகள் சிலர் முயற்சிக்கின்றார்கள் என்றுமு் தமிழ்ப் பயங்கரவாதிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டை மீட்டெடுத்தது ராஜபக்ஷ குடும்பமே என்றும் சுட்டிக்காட்டினர்.

இப்படிப்பட்ட ராஜபக்ஷ குடும்பத்தினரை, குற்றவாளிகள் என்று குறித்த அரசியல்வாதிகள் கண்டபடி விமர்சிக்கின்றார்கள் என்றும் எனவே, இந்த விமர்சனங்களை நிறுத்திககொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

எந்தத் தடைகள் வந்தாலும் அதனைத் தகர்த்தெறிந்து, அரசாங்கத் தேர்தலில் தான் வெல்வது உறுதி என்று கூறிய அவர், இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் பாதுகாவலனாக,  நல்லதொரு தலைவனாக இருப்பேன் என்றும் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .