2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு: நாளொன்றுக்கு 17 கோடி நட்டம்

Editorial   / 2018 ஜூன் 18 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தபால் ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை எனவும், அதற்கு ஒரு மாத காலத்திற்குள் ஏற்றுக்கொள்ளதக்க தீர்வு வழங்கப்படுமெனவும் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார்.

அரச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முன்வர வேண்டுமெனவும் ரோஹண அபேரத்ன  அழைப்பு விடுத்துள்ளார்.

ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக அரசாங்கத்துக்கு நாளொன்றுக்கு 17 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X