2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘தமிழக அரசின் நிலைப்பாடு தடம் மாறுகிறதா?’

Editorial   / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 தமிழர் விடுதலை வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாடு தடம் மாறுகிறதா?” என்று, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக, நேற்று (22) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரொபட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்ய முடியாது என்று,

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது. இச்சிக்கலில் ஜெயலலிதாவின் நிலைக்கு எதிரான நிலைப்பாட்டை அரசு மேற்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனைத் விதிக்கப்பட்ட 26 பேரில் 19 பேர் பல்வேறு கட்டங்களில் விடுதலை செய்யப்பட்டு விட்ட நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரொபட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் மட்டுமே ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களில் நளினி, ரொபட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் தண்டனை 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு விட்டது. 

ஆனாலும், 22 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் தங்களை விடுதலை செய்யக் கோரி ரொபட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் கடந்த 2012ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இன்னும் நிலுவையில் உள்ள அந்த வழக்கில் தான் தமிழக அரசு இவ்வாறு கூறியிருக்கிறது. இதேவழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவிலும் இதே நிலைப்பாட்டைத்தான் தமிழக உள்துறை செயலாளர் தெரிவித்திருந்தார். 

ஆனால், அப்போது தாக்கல் செய்யப்பட்டது. 2012 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மனு என்றும், அதற்கு பதிலாக புதிய மனுவைத் தாக்கல் செய்யப் போவதாகவும் அரசு கூறியிருந்தது. இதனால் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ரொபட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரின் விடுதலைக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. தமிழர்கள் விடுதலைக்கு எதிராக மனுத்தாக்கல் செய்திருப்பதை ஏற்கமுடியாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .