2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தமிழ் அரசியல் கைதி உயிரிழப்பு

Editorial   / 2018 மார்ச் 17 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 70 வயதுடைய அரசியல் கைதியொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.


வவுனியாவைச் சேர்ந்த சண்முகநாதன் தேவகன் என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


விடுதலைப் புலிகளுக்கு வாகனம் எடுத்துக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில், கடந்த 2008ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவருக்கு எதிரான வழக்கில் பத்து வருடங்களின் பின்னர் இவருக்கு 2 வருடச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

தண்டனைக் கைதியான இவருக்கு எதிராக சில மாதங்களுக்கு முன்னர் நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் புதிதாக மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் அவர் மனதளவில் பெரும் பாதிப்படைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வயோதிபரான இவருக்கு சிறை வாழ்க்கையில் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் தொடர்ச்சியாக நோய்வாய்ப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையும் சிறைச்சாலையுமாக இருந்து வந்த இவர், கடைசியாக வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .