2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினைக்கு புதனன்று முற்றுப்புள்ளி’

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் அர​சியல் கைதிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கினாரென, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  

கடந்த வாரம், ஜனாதிபதிக்கும் தனக்கும் இடையில், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், இதுதொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாகவும், சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  நீதி அமைச்சர் தலதா அத்துகோரல ஆகியோருடன் கலந்துரையாடி, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (17), தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாகவும், ஜனாதிபதி தெரிவித்தாரென, எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.  

குறித்த பிரச்சினை தொடர்பில், ஜனாதிபதியால் எடுக்கப்படும் தீர்மானம், தமிழ் அரசியல் கைதிகளுக்குச் சாதகமான தீர்மானமாக அமையுமெனத் தான் நம்புவதாகவும், சம்பந்தனால் நம்பிக்கை வெளியிடப்பட்டது.  

அந்த வகையில், அநுராதபுரம், கொழும்பு மெகசின், போகம்பரை போன்ற சிறைச்சாலைகளில், உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு, இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  

இதற்கு முன்னரும், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருந்ததாகவும், இலங்கை தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பிலும் கைதிகள் விடயத்தில் இலங்கை நடந்துகொள்ள வேண்டிய நடைமுறைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ள நிலையிலும், எதிர்வரும் 17ஆம் திகதியன்று, சாதகமானதொரு பதில் கிடைக்குமென்றும், அவர் மேலும் கூறியுள்ளார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .