2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’தமிழ் தெரியாதது குறைபாடு’

Editorial   / 2019 ஜூலை 19 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனங்களுக்கு இடையில் புரந்துணர்வை ஏற்படுத்த, வெவ்வேறு மொழிகளைப் பேசும் திறன் முக்கியமானது என்று தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளாதது, தன்னிடமுள்ள பெரும் குறைபாடு என்றும் தெரிவித்துள்ளார்.

வெவ்​வேறு மொழிகளைப் பேசும் திறன் இன்மையே, யுத்த சூழ்நிலைக்கு வழிவகுத்து என்றும் அவர் கூறினார்.

மொழிப் பிரச்சினையால் புரிந்துணர்வு இல்லாமற்போகும் போது அது முரண்பாட்டிற்கு வழிவகுக்கும் என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், அந்தக் காலத்தில் தாங்கள் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளவில்லை எனவும் அது தனது குறைபாடு என்றும் குறிப்பிட்டார்.

எனினும் அப்போது ஆங்கில மொழியைக் கற்றுக் கொண்டதாக தெரிவித்த அவர், தமது ஊர்ப் பகுதிகளில் பெரும்பாலான மக்கள் ஒரு மொழியை மாத்திரமே கற்றுக் கொண்டதாகவும், பேசியதாகவும் தெரிவித்ததுடன், இப்போது ஏனைய மொழிகளின் அவசியத்தையும் உணர்வதாக தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .