2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

“தமிழ் மக்களுக்கு மாத்திரம் கண்ணாடி வழங்க முடியாது”

Nirshan Ramanujam   / 2017 ஓகஸ்ட் 22 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுக்க இருக்கக் கூடிய எல்லா பெயர்ப் பலகைகளும் மூன்று மொழிகளிலும் தெளிவாக இருக்க வேண்டும். சிங்களத்திலே பெரிதாக எழுதிவிட்டு, தமிழிலே சிறிதாக எழுத முடியாது. அப்படி எழுதுவார்களேயானால் தமிழர்களுக்கு மாத்திரம் நான் கண்ணாடி கொடுக்க வேண்டி வரும். அப்படி வழங்க முடியாது. அதற்கான சந்தர்ப்பம் கிடையாது என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் சற்றுமுன் நாடாளுமன்றில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
“சிங்கள மொழியில் பெயர்களை வைத்து விட்டு, அது புரிந்தாலும் புரியாவிட்டாலும் கூட அப்படியே தமிழ் மொழியில் உச்சரிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அது சட்ட விரோதமானது, பிழையானது.

நாடு முழுக்க இருக்கக் கூடிய எல்லா பெயர்ப் பலகைகளும் மூன்று மொழிகளிலும் தெளிவாக இருக்க வேண்டும்.

எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற சகல செயற்திட்டங்களுக்குமான தமிழ்ப்பெயரை வைக்க வேண்டும் என்ற கடப்பாட்டில் நான் இருக்கிறேன். அதேபோல அமைச்சர்களோ அல்லது அரசியல் செயற்பாட்டாளர்களோ தமது செயற்திட்டங்களுக்கு தமிழ்ப் பெயரை வைப்பார்களேயானால் அதற்கான சிங்கள பெயரையும் வைக்க வேண்டும் என்பதை நான் கூறிக்கொள்கிறேன்”

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X