2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’தேர்தல் விஞ்ஞாபனம் தேசத்தின் திருப்பு முனையாக இருக்கும்’

Editorial   / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020 ஆம் ஆண்டுக்கான  தேர்தல் விஞ்ஞாபனம் நாட்டுக்கு சிறந்த செய்தியை சுமந்துவரைஉள்ளதாக மின்சக்தி, எரிசக்தி மற்றும் வணிக மேம்பாட்டு அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு, தாமரை தடாகத்தில் நேற்று (16) இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதிர்பார்க்கப்பட்ட நல்லாட்சியை, நிசில குறைப்பாடுகள் காரணமாக முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.

எனினும், ஜனநாயகம் நோக்கி எடுக்கப்பட்ட சாதகமான நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டும். ஜனநாயகம் என்பது நல்லாட்சியின் உயிர்நாடி.

2020 ஆம் ஆண்டுக்கான  தேர்தல் விஞ்ஞாபனம், ஒரு சிறந்த எதிர்காலத்துக்கான  தேசத்தின் திருப்புமுனையாக இருக்கும் என்பது உறுதி” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .