2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தேர்தலுக்கு முன்னர் அரச வேலைவாய்ப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

பொதுத் தேர்தலுக்கு முன்னர் 52 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின், புத்தளம் மாவட்ட தலைவரும், கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் இராஜாங்க அமைச்சருமான சனத் நிசாந்த பெரேரா தெரிவித்தார்.

புத்தளம் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளை, நேற்று (19) மதுரங்குளி கடையாமோட்டையில் சந்தித்து கலந்துரையாடியபோதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால், முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலயங்கள், பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமென,  தேர்தல் காலங்களின்,  ஐ.தே.கவின் போலிப் பிரசாரங்களை நம்பி,  பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஐ.தே.கவுக்கே வாக்களித்தனர். அது மாத்திரமன்றி, நாம் தேர்தலில்  வெற்றிபெற்றதன் பின்னரும், ஐ.தே.கவினர் தொடர்ந்தும் அவ்வாறானப் பிரசாரங்களை செய்து வருகின்றனர் என்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கத்தில்,  முஸ்லிம்களுக்கு கொடுக்க வேண்டிய கௌரவத்தை வழங்கியுள்ளோம் என, இராஜாங்க அமைச்சர்  சனத் நிசாந்த பெரேரா தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி அடைந்தபோது,  அன்றிலிருந்து இன்றுவரை, எமது கட்சியோடு ஒன்றாக பயணித்த,  வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எம்.ரியாஸூக்கு  அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதுடன்,  புத்தளத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு என்ன தேவைகள் உள்ளது என்பதை அறிந்து அதனை நிறைவேற்றிக் கொடுக்கும்  பொறுப்பை அவரிடம் வழங்கியுள்ளோம் என்றார்.


எனவே, ஐ.தே.கவின் பொய்யான பிரசாரங்களை மக்கள் நம்பிவிட வேண்டாம் எனத் தெரிவித்த அவர், எம்மிடம் இனவாதம், மதவாதம் பிரதேசவாதம் கிடையாது. இந்த நாட்டை நேசிக்கின்ற நாம்,  நாட்டில் வாழும் மக்களுக்காக, நாட்டை வளப்படுத்த வேண்டும் என்பதற்காக எவ்விதமான பாகுபாடுகளுமின்றி பணியாற்றி வருகிறோம் என்றார்.

அத்துடன், சஹ்ரான் குழு நடத்திய ஏப்ரல் தாக்குதலையடுத்து ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்த,  நல்லாட்சி அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது எனத் தெரிவித்த அவர், ஏப்ரல் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை  எவ்வித நட்டஈடும் வழங்கப்படவில்லை என மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X