2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’தரம் 6க்கு இணைப்பதில் மாற்றங்கள் இல்லை’

Gavitha   / 2021 ஜனவரி 25 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைவாக, பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் மாற்றங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்று, கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் ஆகக்கூடுதலான புள்ளிகள், கடந்த ஐந்து ஆண்டுகளில் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தன எனவும் ஆனால், பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடைமுறையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கூறினார்.

மேலும் உரிய பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும், அவர் கூறினார்.

அத்துடன், பாடசாலை வகுப்பறையின் அளவையோ, மாணவர்களின் எண்ணிக்கையையோ குறைப்பதற்கான எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த கபில, மாணவர்களுக்கு அநீதி ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் கூறினார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியுமெனவும், கபில தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X