2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தற்கொலைதாரியின் தந்தை நீதிமன்றில் ஆஜர்

Editorial   / 2021 ஜனவரி 21 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று, தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட அலாவுதீன் அஹமட் முவார் என்ற தற்கொலைதாரியின்  தந்தையை, ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பெப்ரவரி 2ஆம் திகதியன்று, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் மொஹமட் மிஹால், சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு, நேற்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் மற்றுமொரு தற்கொலைதாரியும் கோடீஸ்வர வர்த்தகருமான மொஹமட் இப்ராஹிம் இன்சாப்பின் வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்கள் பத்துப் பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, அவர்கள் 10 பேரும் கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரியவால், நேற்று முன்தினம் (19) விடுதலை செய்யப்பட்டனர். 


இந்தச் சந்தேக நபர்கள் தொடர்பில், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எவையும் எடுக்கப்படமாட்டாது என, சட்டமா அதிபர் வழங்கியுள்ள ஆலோசனைக்கமைய, சந்தேகநபர்களை விடுதலை செய்யுமாறு, பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையைக் கவனத்தில் எடுத்த நீதவான், சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .