2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

துறைமுக நகரின் முதலாவது வேலைத்திட்டத்துக்கு அனுமதி

Nirosh   / 2021 மே 18 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூறு பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டிலான கொழும்புத் துறைமுக நகரத்தின் முதலாவது திட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளமை, பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் அண்மையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தினூடாகத் தெரியவந்துள்ளது.

2025ஆம் ஆண்டு நி​றைவடைய உள்ள கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தின் முதலாவதுக் கட்டத்தில், சர்வதேச ஏ தரம் வாய்ந்த உயர்நிலை அலுவலகக் கோபுரமும்,  உயர்முனை வதிவிடக் கோபுரம், சில்லறை நெடுமேடைப் பீடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

இரண்டாவது கட்டத்தில், இரண்டு சர்வதேச  ஏ தரம்வாய்ந்த உயர்நிலை அலுவலகக் கோபுரங்களும், ஒரு சில்லறை நெடுமேடைப் பீடத்தையும் கொண்டிருக்கும். ​இலங்கை முதலீட்டுச் சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.

இதேவேளை கொழும்புத் துறைமுக நகருக்குப் பல வரிச்சலுகைகள் வழங்கப்படும் நிலையில் இதன் திட்டங்கள் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்துக்குப் நேரடியாகப் பங்களிப்புச் செலுத்த வேண்டுமென ​இலங்கை முதலீட்டுச் சபைக்கு அரசாங்க நிதிப் பற்றியக் குழு அறிவுறுத்தியுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆரம்பிக்கப்பட உள்ள டயர்களை உற்பத்தி செய்யும் ஆலையான சிலோன் டயர் உற்பத்தி கம்பனிக்கும் அரசாங்க நிதிப் பற்றியக் குழு அனுமதி வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .