2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தற்போதைய அரசாங்கத்துக்கு நிருவாத்திறனே இல்லை

Editorial   / 2018 ஜனவரி 15 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்களை மதுக்கடைகளுக்கு அனுப்புவதற்காக அனுமதி வழங்கப்பட்டதன் ஊடாக, மிகவும் திட்டமிட்ட வகையில் இந்த நாட்டின் கலாசாரத்தை சீரழிக்க திட்டம் தீட்டப்படுகிறது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

காலி உடுகம விளையாட்டரங்கில்  நேற்று (14) பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசார நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

பல வருட காலமாக பெண்களுக்கு இருந்துவரும் கௌரவத்தை தற்போது சீர்குழைக்க எண்ணியுள்ளனர். இரவு 10 மணி வரை மதுக்கடையில்  ஒரு பெண் வேலை செய்வாராயின் அவரது நிலை குறித்து நாம் சிந்திக்க முடியும்.

உள் நோக்கங்களை கருத்திற்கொண்டே இவர்கள் இத்தகைய வேலைத்திட்டங்களை செய்கின்றனர்.இந்த  அரசாங்கம் மக்களை மறந்து செயற்படுகிறது. ஜனாதிபதி கூறுகிறார் அரசாங்கம் குப்பை மேட்டை விட நாறுகிறது என்று. இதனை யாருக்கு கூறுகிறார்? நாங்களா அரசாங்கத்தை கொண்டு நடத்துகிறோம்? யாருடைய தவறு இது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .