2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’தற்போதைய அரசாங்கம் புதியதல்ல’

Editorial   / 2020 ஜூலை 11 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசாங்கம் புதிய அரசாங்கம் எனக்  கூறுவது தவறென தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர் எரான் விக்கிரமரட்ன, 8 மாதங்கங்களாக இந்த அரசாங்கமே நாட்டை ஆட்சி செய்கிறது என்றும் தெரிவித்தார். 

 ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று ​(11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

தற்போதைய அரசாங்கம் புதிய அரசாங்கமல்லவெனவும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள் கடந்துள்ளனவெனவும் தெரிவித்தார்.

இவ்வாறு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முன்னைய அரசாங்கம் கொண்டு வந்த பொருளாதார திட்டங்களை ஆராய்ந்த பின்னரே திருத்தம் செய்ய வேண்டுமென தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் அவ்வாறு செய்வதில்லை என்றார்.

அத்தோடு நல்லாட்சி அரசாங்கம் அரச ஊழியர்களை கௌரவத்துடனேயே நடத்தியதெனவும் , அதனால் பிரச்சினைகள் அனைத்ததையும் பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துகொள்ள முற்பட்டதெனவும் தெரிவித்தார். 

அதனால் அரச ஊழியர்களை அச்சுறுத்தி ஒருபோதும் நிர்வாகச் செயற்பாடுகளை முன்னெடுக்க கூடாதென தெரிவித்த அவர், நிர்வாகச் சேவையில் உள்ளவர்கள் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்றும் தெரிவித்தார். 

இவ்வாறான திறமையானவர்​களை அரசாங்கமும் கௌரவிக்க வேண்டியது அவசியமென்பதோடு, அவர்களுடைய அனுபவங்களை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார். 

அதேபோல், அரசாங்கம் தற்போது கூறும் செயற்பாடுகளை மத்திய வங்கி முன்னெடு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தென தெரிவித்த அவர், அவ்வாறான அதிகாரிகளை அச்சுறுத்தி செயற்படுத்தவே அரசாங்கம் முயற்சித்தது என்றார். 

எவ்வாறாயினும் நிபுணத்துவம்,  கல்வி தெரிவு கொண்ட அரச ஊழியர்கள் அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு அடிப்பணியபோவதில்லை என்றும் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X