2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தாழமுக்கம் தொடர்பாக சிவப்பு எச்சரிக்கை

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 24 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வங்காள விரிகுடாவின் தெற்மேற்குப் பகுதியில் உருவான  தாழமுக்கம் தொடர்பாக  சிவப்பு எச்சரிக்கை அறிவித் தலை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

அடுத்த 24 மணித்தியாலங்களில்,இந்தத் தாழமுக்கம் புயலாக மாறலாம். வடமேற்குத் திசையில் நகர்ந்து, தீவிர புயலாக தமிழ் நாட்டை தாக்கலாம் என அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வடக்கு கிழக்கு கடல் சடுதியாக கொந்தளிக்கலாம். காற்றின் வேகம் திடீரென மணிக்கு 80 முதல் 100 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.

புத்தளத்தில் இருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையிலான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடற்பரப் பில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .