2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘திருடர்-திருடர் கூட்டணி’

Niroshini   / 2018 பெப்ரவரி 07 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழல் மோசடிகளுக்கு எதிராக ஜனாதிபதியால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக அபாயகரமான திருடர் – திருடர் கூட்டணியொன்று உருவாகி வருவதாகவும், அதில் ஐக்கிய தேசியக் கட்சியையும் சம்பந்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் தொடர்ந்தும் வெளிநாட்டில் ஒழிந்திருக்க முடியாது என்றும் எங்கு ஒழிந்திருந்தாலும் அவர் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்தார்.   

இது குறித்த அவர் தெரிவித்ததாவது,  

“இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரத்தில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.  

“பிணைமுறி விவகாரத்தில் மோசடி நடக்கவில்லை என்று யாரும் கூறினாலும் அது பொய்யாகும். இதுவரையான மோசடிகளை ஒன்று சேர்த்து யாரும் கணக்குச் சொல்ல முடியும். எனினும், மத்திய வங்கியின் வரலாற்றில் ஒருதடவையில் இடம்பெற்ற பாரிய மோசடியாக இந்த சம்பவமே காணப்படுகிறது.   

“இது முதலாவது நிதி மோசடியும் கிடையாது. 2008ஆம் ஆண்டில் இருந்து இவ்வாறான கொடுக்கல், வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாக, இந்த ஆணைக்குழு அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தக் காலத்தில் இடம்பெற்றிருந்தாலும் அது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.   

“இந்தச் சம்பவம் காரணமாக இன்னும் பல்வேறு சம்பவங்கள் வெளிவந்துள்ளன. இந்த ஏலம் 2008ஆம் ஆண்டில் ஆரம்பித்துள்ள நிலையில், அப்போதிலிருந்தே விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

“இந்த நாட்டின் வரலாற்றில் எண்ணற்ற ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றன. எனினும், அவற்றுக்கு நடந்தது ஒன்றுமில்லை. ஆனால், தற்போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் பதவி விலகியுள்ளனர். அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு மேலதிக நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கபட்டுள்ளன.   

“இந்த நடவடிக்கைகளை சிலர் நாடகம் என்கின்றனர். தேர்தல் நிமித்தமான நடவடிக்கை என்கின்றனர். இவ்வாறு அனைத்தையும் அவமதித்துப் பேசுவதை தவிர்க்க வேண்டும்” என்றார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .