2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’திலகர் ஒரு சிறந்த வழிகாட்டி’

Editorial   / 2020 ஜூலை 11 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தமக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பதாகத் தெரிவித்துள்ள இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் சந்திரகுமார், தனக்கு ஆதரவுத் தெரிவித்து இரத்தினபுரியில் திலகர் களமிறங்கியிருப்பது தனக்கு பெரும் பலமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் சிறப்பாகச் செயற்பட்டு நுவரெலியா மாவட்டத்தில் நாடாளுமன்ற செயற்பாடுகளால் முதலிடம் பிடித்துள்ள திலகருக்கு இரத்தினபுரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மலையகத் தோட்டத்தில்  நாடாளுமன்றம் சென்று சாதிக்க முடியும் என்பதை  திலகர் தனது முதலாவது நாடாளுமன்ற பிரவேசத்தில் நிரூபித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X