2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘தீர்மானம் இல்லை’

Editorial   / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

“றோகிஞ்சா அகதிகளை இலங்கைக்கு ஏற்றுக்கொள்ள, இதுவரை எவ்விதத் தீர்மானமும் எடுக்கவில்லை” என, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், தனது பேஸ்புக்கில் அண்மையில் (17) பதிவேற்றியுள்ள காணொளியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

“மியான்மாரின் றோகிஞ்சா அகதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஏற்றுக்கொள்ள, இலங்கைக்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, ஊடகங்கள் வாயிலாக பல செய்திகள் வௌிவந்தவண்ணம் உள்ளன. இதனால், நாட்டுக்குள் பதற்றம் நிலவியுள்ளது.

“குறிப்பாக, இஸ்லாமிய அரசியல் தலைவர்களும் மதக் குழுவினரும், றோகிஞ்சா முஸ்லிம் அகதிகள் தொடர்பில், கொழும்பில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்புப் பேரணிகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

“இலங்கை அரசாங்கமோ அல்லது அமைச்சரவையோ, றோகிஞ்சா அகதிகளை இலங்கைக்கு ஏற்றுக்கொள்வது தொடர்பில், எச்சந்தர்ப்பத்திலும் வாக்குறுதியையோ, எவ்வித முயற்சிகளையோ எடுக்கவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X