2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘துப்பாக்கி காணாமல் போனமை குறித்து மஹிந்த கவலை’

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் திணைக்களத்துக்குரிய ஸ்னைப்பர் ரக துப்பாக்கியானது காணாமல் போயுள்ளமையானது பாரிய பிரச்சினை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தங்காலை- கார்ல்டன் இல்லத்தில் இன்று இடம்பெற்ற மத நிகழ்வின் போதே மஹிந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த மஹிந்த,

பொலிஸ் போன்ற இடங்களிலிருந்து துப்பாக்கி வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளமையானது பெரிய பிரச்சினையாகும். இதனை யாருக்கு எதிராகப் பயன்படுத்தப் போகின்றார்கள் ஒரு புறம் ஜனாதிபதியையும், மறுபுறம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் கொல்லப் போவதாகத் தெரிவிக்கின்றனர். யாரைக் கொல்ல இந்த ஸ்னெப்பர் காணாமல் போயுள்ளதென தெரியவில்லை. ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாகத் தெரிவித்த குரல்களை யாரும் எதுவும் செய்யவி்லலை என்றும் தெரிவித்துள்ளார்.

டொலரின் அதிகரிப்பால் பொருளாதாரத்துக்கு பாதிப்பு இல்லையென மக்களை ஏமாற்றப் பாரக்கின்றனர். திடீரென்று கார்களின் விலை அதிகரித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் அனைத்து பொருட்களுக்கும் ரூபாய் மூலம் அதிகம் செலுத்த வேண்டியுள்ளது. நாம் தற்போது, எவ்வித உற்பத்தியும் செய்யாமல் அரிசி, பருப்பு என அனைத்தையும் இறக்குமதி செய்கின்​றோம். எமது காலத்தில் அதிகமான சில பொருட்கள் இறக்குமதி செய்யப்படவில்லை என்றார்.

எனவே இந்த பொருளாதார விடயத்தில் இலங்கை வங்கி, நிதி  அமைச்சு ​இணைந்து தலையிட்டு ஏதாவதொரு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .