2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

துருவித் துருவி சோதனை

Editorial   / 2018 நவம்பர் 16 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றம் சபை நடவடிக்கை இன்று 1:30க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

அதற்கு முன்னர், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித்தாலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர், ஒவ்வொரு கட்சிகளின் நாடாளுமன்றக் குழுக்கூட்டங்கள் நடைபெற்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடியது. ஐக்கிய தேசிய முன்னணியின் குழுக்கூட்டம் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலும், ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம எதிரணியின் முதற்கோலாசானும், ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்கவின்  தலைமையிலும் நடைபெற்றது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் வளாகத்தில் பல்லடுக்குப் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. நாடாளுமன்ற பொலிஸாருக்குப் மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அத்துடன், ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த சிலரும் கடமையிலிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

நாடாளுமன்றத்துக்குள் நுழையும் சகலரும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், உடற்சோதனையை நாடாளுமன்ற பொலிஸார் மேற்கொண்டனர். இந்நிலையில், மடிகணினி உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்கள் யாவற்றையும் இயக்கச் செய்து, விசேட அதிரடிப்படையினர் துருவித் துருவி சோதனைச் செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .