2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘தேசிய அரசாங்கத்துக்கான யோசனையை 20ஆம் திகதி தோற்கடிப்போம்’

Nirosh   / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அரசாங்கத்தை நிறுவுவதற்கான யோசனையொன்று, எதிர்வரும் 20 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெ ளியாகியுள்ளனவெனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, அந்த யோசனையை தோற்கடிப்​போமெனத் தெரிவித்துள்ளதுடன். அத்துடன், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையும் வேட்பாளரையே, ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்கவுள்ளதென ஆரூடம் கூறியுள்ளது.  

பத்தரமுல்ல - நெலும் மாவத்தையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வீ. சானக இதனைத் தெரிவித்தார். 

இதன்போது மேலும் தெரிவித்த அவர், அமைச்சர் ‌லஷ்மன் கிரியெல்ல, தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான யோசனையை எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். அவ்வாறான யோசனையொன்று அன்றையதினம் கொண்டுவரப்படுமாயின், அதனை தாங்கள் தோற்கடிப்போம் என்றார்.  

ஐ.தே.க முன்வைக்கும் நாட்டுக்கு நன்மை பயக்கும் எந்தவொரு யோசனையையும் தாம் ஆதரிப்போமெனத் தெரிவித்த அவர், எனினும், நாட்டை நாசம் செய்யும் யோசனை நாம் தோற்கடிப்போம் என்றார்.  

போதைப்பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் அமைச்சரவையிலிருப்பதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் தெரிவித்துள்ளார். இதனை வெளிப்படுத்தியமைக்காக, நாம் அவ​ருக்கு நன்றி சொல்ல வேண்டுமெனத் தெரிவித்த அவர், கடந்த நான்கு ஆண்டுகள் இந்த அமைச்சர்கள் எடுத்திருக்கும் தீர்மானங்களை பார்த்தால், அவர்கள் போதையிலிருந்தே தீர்மானங்களை எடுத்துள்ளனரென ஒரு முடிவுக்கு வரலாமென்றார். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்குட்படுத்தி தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றதெனவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.  

மேலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து உருவாக்கவுள்ள மாபெரும் கூட்டணியிலிருந்தே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுச் செய்யப்படுவாரெனத் தெரிவித்த அவர், தோல்வியடையும் ஜனாதிபதி வேட்பாளரையே ஐ.தே.க களத்திலிறக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X