2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேயிலை தடையை நீக்க ரஷ்யாவுக்கு செல்கிறது இலங்கை குழு

Editorial   / 2017 டிசெம்பர் 16 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இருந்து தேயிலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு ரஷ்ய அரசாங்கம் தடை விதித்திருப்பது, இலங்கை அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைப் பொதிக்குள் வண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இலங்கையில் இருந்து தேயிலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிக கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்த நிலையில், ரஷ்யாவின் தற்காலிக தடை இலங்கைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, இந்தப் பிரச்சினை தொடர்பாக ரஷ்ய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு உயர் மட்டக் குழுவொன்றை, மொஸ்கோவுக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பெருந்தோட்டைத் துறை அமைச்சர் நவீன் திசநாயக்கவும், அடுத்தவாரம் ரஷ்யாவுக்குப் பயணமாகவுள்ளார்.

அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .