2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நிதிமோசடி செய்தவருக்கு 367 வருட கடூழிய சிறை

Editorial   / 2019 டிசெம்பர் 06 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான 21 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில்,  குறித்த நிறுவனத்தை சேர்ந்த கணக்காளர் ஒருவருக்கு 367 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 21 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷீ மகேந்திரன் இந்த தீர்ப்பினை இன்று (06) வழங்கியுள்ளார்.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹிக்கடுவ லியனகே நந்தசிறி என்ற நபர் தற்போது  தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், அவரை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதிவாதிக்கு விதித்து மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2000 - 2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த நிதிமோசடி இடம்பெற்றதாக  சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .