2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நான்கு வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் நால்வருக்கு விசேட பாதுகாப்பு  பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது.

பொலிஸ்மா அதிபரின் அறிவுரையின்படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் புதிய பாதுகாப்பு தொடர்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாய ராஜபக்ஷ, சஜித் பிரேமதாச, அநுரகுமார திசாநாயக்க, மஹேஷ் சேனாநாயக ஆகியோருக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு புலனாய்வு பிரிவினரால் பொலிஸார் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, குறித்த வேட்பாளர்களுக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இருவர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் இருவர் புதிய பாதுகாப்பு தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேவையான பாதுகாப்பினை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அண்மையில் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X