2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’நல்லாட்சியில் இராணுவ வேட்டை தொடர்கிறது’

Kamal   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சி அரசாங்கத்தில் இராணுவ வேட்டை தொடர்கிறதென குற்றஞ்சாட்டிய தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, எக்னெலிகொட விவகாரத்தில் மற்றுமொரு இராணுவ அதிகாரி கைது செய்யப்படவுள்ளாரென்றும் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (20) ந​டைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,

நல்லாட்சி அரசாங்கம் இராணுவ வேட்டையை தொடர்ந்தும் முன்னெடுக்கிறது. தற்போது இராணுவ புலனாய்வு பிரிவின் 7 ஆவது படையணியின் கட்டளை பிரதானியாக செயற்படும் லெப்டினன் கேர்ணல் ​எரந்த பீரி​ஸை கைது செய்ய குற்றப்புலனாய்வு பிரிவு கைது செய்ய முற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளரென போலியா தன்னை அ​டையாளப்படுத்திகொண்ட  புலிகளுக்கு சாதகமான செயற்பட்ட ​எக்னெலிகொடவின் கொலையுடன் தொடர்புபட்டுள்ளார் என்ற காரணத்தினாலேயே அவரை கைது செய்ய முற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் முன்பு கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள் மீதான குற்றச்சாட்டுக்களே இன்னும் நிரூபிக்கப்படாதிருக்கும் நிலையில்,லெப்டினன் கேர்ணல் ​ஹெரந்த பீரிஸை கைது செய்து அவர் மீது சுமத்தப்பட்டுள்ள ​போலிக் குற்றச்சாட்டை ஏற்றுகொள்ளுமாறு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X