2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘நல்லிணக்கத்தை ஏற்படுத்த வெளிநாட்டு சக்திகள் தடை’

Editorial   / 2018 மார்ச் 24 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, வெளிநாடுகளில் உள்ள குழுக்களும், பல்வேறு வெளிநாட்டு சக்திகளுமே தடையாக உள்ளன” என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய சிறப்பு செவ்வி ஒன்றிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“தவறான புரிந்துணர்வினாலேயே, 1950களில் இலங்கையில் பிரச்சினைகள் தோன்றின. அதற்கு முன்னர் பிரச்சினைகள் இருக்கவில்லை. வெற்றிபெறுவதற்கும், மக்களின் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் இனவாத அரசியலை எளிதான வழியாக நோக்கிய சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளால் தான் இந்தப் பிரச்சினை ஆரம்பிக்கப்பட்டது.

“காலப்போக்கில் இது போராக மாறியது. அது இந்தியாவிலும், உலகத்திலும் பரவியது. துரதிஷ்டவசமாக போருக்குப் பின்னரும் கூட, குறிப்பிட்ட வெளிநாட்டு சக்திகள், மற்றும் வெளிநாடுகளில் செயற்படும், குழுக்கள், இந்த நாட்டை உறுதியான நிலையில இருப்பதற்கு அனுமதிக்கவில்லை.

“இன்று இந்த நாட்டில் வாழும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு மிகப் பெரிய தடையாக இருப்பது, வெளிநாடுகளில் இருந்து செயற்படும் குழுக்களும், பல்வேறு வெளிநாட்டு சக்திகளும் தான்” என்று மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X