2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘நாட்டில் மீண்டும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவேன்’

Editorial   / 2018 டிசெம்பர் 16 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாம் ஆரம்பித்த அபிவிருத்தி திட்டங்கள் பல வாரங்களாக இடைநிறுத்தப்பட்டதால், நாடு சரிவை எதிர்நோக்கியுள்ளது. எனவே முதலாவதாக நாட்டை சாதாரண நிலைக்குக் ​கொண்டு வந்து அபிவிருத்தியை மீண்டும் ஏற்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று காலை பிரதமராகப் பதவியேற்ற பின்னர் ஆற்றிய விசேட உரையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னைய ஆட்சிகளின் போது, நாடு எதிர்நோக்கிய பொருளாதார நிலையைச் சரி செய்வற்கு கடந்த 3 வருடங்களாக மக்கள் பல கஷ்டங்களை எதிர்கொண்டனர். அதன் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதே இந்தப் பிரச்சினை உருவானது.  எனினும் இதைவிட சிறந்த பொருளாதார நிலையை மக்களுக்குப் பெற்றக்கொடுப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .