2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நாட்டுக்கு திரும்புமாறு 10 எம்.பிகளுக்கு அழைப்பு

Editorial   / 2018 மார்ச் 21 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிப்பட்ட விஜயங்களை மேற்கொண்டு, வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரையும் உடனடியாக நாட்டுக்குத் திரும்புமாறு, அக்கட்சி அவசர அழைப்பொன்றை விடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகங்கொடுக்கும் நோக்கிலேயே, அவர்கள் அழைக்கப்பட்டுள்ள​னரென, கட்சித் தகவல் தெரிவிக்கின்றது.

இதேவேளை, பிரதமருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுமாயின், அதனை முழுமையாக தோல்வியடைச் செய்வதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒருமித்துத் தீர்மானித்துள்ளனார்.

அலரி​மாளிகையில், திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற கூட்டத்திலேயே, இவ்வாறு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றத்தில் இன்னும் கையளிக்கப்படவில்லை என்பதனால், அது தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதன்போது தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டால், விவாதம் நடத்துவதற்கு மிகவும் குறுகிய காலத்துக்குள் நாளொன்றை வழங்கி, தோல்வியடைச் செய்யவேண்டுமென, அந்தக் கூட்டத்தின் போது கருத்துகள் முன்வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .