2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நாலக்கவுக்கு பிணையில்லை

Editorial   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள்  பணிப்பாளரும் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபருமான நாலக சில்வாவின் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை அவருக்கு பிணை வழங்கப்படாதென நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பில் நாலக சில்வா கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,

பயங்கரவாதத்தை தடுப்பது ( தற்காலிக ஒதுக்கீட்டு சட்டம்) 7.(2) உறுப்புரைக்கமைய இந்த நீதிமன்றத்துக்கு பிணை வழங்குவதற்கான அதிகாரம் இல்லையென்றும் கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று அறிவித்துள்ளார்.

இதேவேளை இந்தக் கொலை சதி முயற்சி தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள மற்றுமொரு சந்தேகநபரான தோமஸ் என்ற இந்தியப் பிரஜையும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், சந்தேகநபர்கள் இருவரையும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .