2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’நிறைவேற்று அதிகார முறைமை ஒழிப்பது தேசத்துரோகம்’

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாதொழிக்க முயல்வது, தேசத்துரோக செயற்பாடு என, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் ​தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினூடாக, நாட்டின் ஒற்றுமை பாதுகாக்கப்படுவதாகவும் இந்நிலையில், அதை ஒழிக்க யார் முயன்றாலும், அது ஒரு தேசத்துரோக செயற்பாடாகவே கருதப்படும் என்றும் கூறினார்.

ஆகையால், நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்ய முயல்பவர்களுக்கு எதிராக குரல் கொடுப்போம் என்று அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X