2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ‘இணை அனுசரணையை நீக்குக’

Editorial   / 2019 மார்ச் 22 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா. நிரோஷ்

கலப்பு நீதிமன்றத்தை இலங்கைக்குள் நிறுவப்படாதென, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, ஐ.நாவில் கூறவில்லை. அரசமைப்பில், அதற்கு இடமில்லையென்றுதான் கூறியுள்ளார் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, அர​சமைப்பை திருத்தியாவது, பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நிறைவேற்றுவதற்கு, அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆகையால், நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி, இணை அனுசரணையை நீக்கவேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளது.   

இணை அனுசரணையை நீக்குவதற்கு, கடிதம் ஊடாக கோரிக்கையொன்றை முன்வைக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ள பொதுஜன பெரமுன, மேற்படி விவகாரத்தில், ஜனாதிபதி தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளது,   

பத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போது, நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர, மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் கருத்துகளால், அக்கட்சி எதிர்வரும் தேர்தல்களில் படுதோல்வியடையும் எனத் தெரிவித்துள்ள அவர், சுதந்திரக் கட்சியின் ஆதரவு கிடைக்காவிட்டாலும் எதிர்வரும் தேர்தல்களில் நாம் வெற்றிபெறுவோம் என்றார்.   

​யுத்தக் குற்றங்களில் இராணுவ வீரர்கள் ஈடுபடவில்லையென, அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிற போதிலும், இந்தக் குற்றச்சாட்டுகளால், இராணுவத்தினருக்குப் பதவி உயர்வுகளை பெற்றுக்கொள்வதிலும், வெளிநாடுகளுக்குச் செல்வதிலும் தடை ஏற்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர், இது தொடர்பில், அரசாங்கத்தின் நிலைபாடு என்னவென்பது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.   

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் வெற்றி குறித்து சுதந்திரக் கட்சியினரின் விமர்சனங்கள், அக்கட்சி இனிவரும் எல்லாத் தேர்தல்களிலும் படுதோல்வியடையும் என்பதையே எடுத்தியம்புகின்றது என்று தெரிவித்த அவர், சுதந்திரக் கட்சியின்​றி, தங்களால் வெற்றியீட்ட முடியுமென்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .