2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை நீக்கப்படக் கூடாது’

Editorial   / 2018 டிசெம்பர் 18 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்கக் கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

உலகில் மிகவும் பிரபலமான அதிகார முறையே இந்த நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை என்றும் அவர்  தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்த நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்தார்.

உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் இந்த ஜனாதிபதி முறையே காணப்படும் நிலையில், இலங்கையில் மாத்திரம் ஏன் இந்த முறைக்கு எதிர்ப்பு என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இலங்கையிலுள்ள நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையில் தவறில்லை. அதனை நடைமுறைப்படுத்துவதில் தான் தவறு உள்ளது. எனவே எமது அபிப்ராயத்தின் படி இந்த முறை நீக்கப்படக் கூடாது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X