2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு எதிர்ப்பு

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு தமது கட்சி எதிர்ப்பினை வெளியிடுவதாக, பிவிதுரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

ஒன்றிணைந்த கூட்டணியானது இது தொடர்பில் நிரந்தரமான அறிக்கை எதனையும் வெளியிடவில்லையென்று அந்தக் கட்சியின் ஊடகச் செயலாளர் துசார​ திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு முயற்சி எடுத்தால், அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும், இது தொடர்பில் பிவிதுரு ஹெல உறுமய கட்சிக் கூட்டத்தில் தமது கட்சியின் உறுதியான நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .