2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

நீதி விசாரணைகளில் தலையீடு; மைத்திரிக்கு எதிராக சர்வதேசத்திடம் முறைப்பாடு

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையீடுகளை மேற்கொள்ளவதாக தெரிவித்து, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தூதரகங்களிலும் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக நீதிமன்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விசாரணைகளில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையீடுகளை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தியே, , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நேற்று கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் சுவிஸ் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தூதரகங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .